வாழைகளுக்கு தீவைப்பு: விவசாயி மீது போலீசார் வழக்கு

குரும்பூர் அருகே வாழைகளுக்கு தீவைப்பு தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடியைச் சேர்ந்த அழகேசன் (வயது 59). விவசாயி. இவர் தனது சகோதரி சுதந்திரக்கனி வயலில் 550 வாழைகள் பயிர் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-9-2022 அன்று இவரது தோட்டத்தில் வாழைகள் தீயில் கருகி கிடந்தன. இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான கண்ணன் என்பவர் தீவைத்து கொளுத்தியதாக குரும்பூர் போலீஸ் நிலையத்தில் 22-9-2022 அன்று அவர் புகார் செய்துள்ளார். ஆனால் இதில் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று கூறி 20-2-2023 அன்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் அழகேசன் முறையிட்டுள்ளார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






