அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை, கலாசார விழா


அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை, கலாசார விழா
x

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை, கலாசார விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனி திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை மற்றும் கலாசார பயிற்சி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோபி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை, ஆடல், பாடல், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களை தமிழக அரசு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா விஜயன், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சஞ்சீவி நன்றி கூறினார்.


Next Story