அரசு கல்லூரியில் கலை விழா


அரசு கல்லூரியில் கலை விழா
x

தர்மபுரி அரசு கல்லூரியில் கலை விழா நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலை விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இயற்கை வள பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவத்தை அனைத்து நிலைகளிலும் கடைபிடித்தல், பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் "பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் முருகதாஸ் சூரன் வேடம் அணிந்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story