ஏஆர்டி ஜுவல்லரி மோசடி விவகாரம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை


x

ஏஆர்டி ஜுவல்லரி மோசடி வழக்கில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இரண்டாவது முறையாக பூட்டை திறந்து சோதனை நடத்தினர்.

சென்னை,

சென்னை நொளம்பூரில் ஏஆர்டி ஜுவல்லரி மோசடி வழக்கில், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இரண்டாவது முறையாக பூட்டை திறந்து சோதனை நடத்தினர்.

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த ஏர்ஆர்டி ஜுவல்லரி உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் சகோதரர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

ஒரு மாதத்துக்கு முன்பு, அந்த வளாகத்தில், முதலீட்டார்களின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பத்துக்கும் மேற்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வளாகத்தின் பூட்டை உடைத்து தீவிர சோதனை செய்து கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக மீண்டும், 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அந்த வளாகத்தின் பூட்டை திறந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து, சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

1 More update

Next Story