ரெயில் நிலையத்தில் பாரதியார் குறித்த கலைநிகழ்ச்சி


ரெயில் நிலையத்தில் பாரதியார் குறித்த கலைநிகழ்ச்சி
x

கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் பாரதியார் குறித்த கலைநிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

கடையம்:

கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் கடையம் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகள், பாரதி கவிதைகள், படங்கள் போன்றவற்றை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் வரவேற்றார். நிலைய கண்காணிப்பாளர் பிரண்ட்ஸ் வினோத், நிலைய அதிகாரிகள் முகமத் பிலால், ராபர்ட் மற்றும் கிருஷ்ண ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். ஓவியர் மாரி ஆனந்த் பாரதியார்- செல்லமாளின் ஓவியத்தை வரைந்து தொடங்கி வைத்தார். கடையம் நலச்சங்க செயலாளர் கோபால் முருகன், ஆசிரியர் வேலு நீலகண்டன், கல்யாணசுந்தரம், பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story