டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு


டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது -  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
x

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி ஆண்டு தோறும் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது.

திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த விழாவினையொட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் விருது புதுச்சேரியை சேர்ந்த சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும்.

இந்த விருதுகள் 15-ந்தேதி விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story