கலைஞர் நூற்றாண்டு நூலகம்; கலைஞரின் மாட்சிக்கும், தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் - கவிஞர் வைரமுத்து டுவீட்..!

கலைஞர் நூற்றாண்டு நூலகம்; கலைஞரின் மாட்சிக்கும், தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் - கவிஞர் வைரமுத்து டுவீட்..!
x

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை,

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரமாண்டமாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பெரிய நூலகங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான இ்ன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கலைஞரின் மாட்சிக்கும், தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

மதுரையில் திறக்கப்பெறும்

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

கலைஞரின் மாட்சிக்கும்

தளபதியின் ஆட்சிக்கும்

வரலாற்று அடையாளமாகும்

தமிழச் சாதியை

அறிவுக் குடிமக்களாக்கி

இந்த ஏழு தளங்களும்

ஏழு கண்டங்களுக்கும்

இட்டுச்செல்க என்று

வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு கர்வப்படும்

காரணங்களுள்

இதுவும் ஒன்று

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story