கலைஞர் காப்பீடு திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்


கலைஞர் காப்பீடு திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்
x

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் பொது சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் பொது சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை இயக்குநர்கள், நகர நல அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில், வரும் 4ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவகால நோய்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், 10 வாரங்களுக்கு 10 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story