கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாம்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகையில் நடந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகளிர் உரிமை தொகை

தமிழகம் முழுவதும் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்கள் வினியோகத்திற்குப் பிறகு அனைத்து பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை அவரது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

பதிவு செய்யும் முகாம்

இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியது. அதன்படி நாகை ஆரியநாட்டுத்தெருவில் உள்ள வலைபின்னும் கூடம், வெளிப்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அருகில் உள்ள நூலக கட்டிடம், தெற்குபால்பண்ணைச்சேரியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள சேவை மைய கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், கோவில்பத்து கிழக்கு ஊராட்சியில் உள்ள கிராம கூட்டுறவு அங்காடி கட்டிடம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், தாசில்தார்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story