கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா
x
தினத்தந்தி 23 May 2022 2:48 PM GMT (Updated: 23 May 2022 2:57 PM GMT)

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழாவையொட்டி தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தர்மபுரி

தர்மபுரி:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்ட தொடக்க விழாவையொட்டி தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வேளாண் வளர்ச்சித் திட்டம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 57 கிராம ஊராட்சிகளில் திட்ட தொடக்க விழா காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கலெக்டர் பங்கேற்பு

நல்லம்பள்ளி தாலுகா பாளையம்புதூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற திட்ட தொடக்க விழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்துகொண்டு விவசாயிகளுடன் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.பி., எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா மற்றும் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பயிர் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை, விசைத் தெளிப்பான்கள், தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Artist's All Village Integrated Agricultural Development Project Launch Ceremonyஇதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாரங்களில் 57 கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story