மெரினாவில் கலைஞர் நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்


மெரினாவில் கலைஞர் நினைவிடம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 26 Feb 2024 1:26 AM GMT (Updated: 26 Feb 2024 2:34 PM GMT)

நினைவிடத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் 'டிஜிட்டல்' அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


Next Story