அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா


அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா
x

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா நடந்தது. இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா நடந்தது.

இதில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், இசை, நடனம், தமிழ் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப்போட்டி, பரதம், குழு நடனம், இசை உள்பட 37 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து கலைத்திருவிழா நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) காளிதாஸ் தலைமை தாங்கினார்.

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், வேட்டவலம் பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், 3-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பேசினார்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

இதில் கீழ்பென்னாத்தூர், கொளத்தூர் ஆகிய மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் தேவாசீர்வாதம், கருணாகரன், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை ஜமீன்அகரம் பள்ளி தலைமைஆசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை கலைத்திருவிழா குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story