ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும்


ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஆங்கில வழி மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனுஅளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் துரை, மூர்த்தி, சாதிக், முகமதுகாஜா, சாலமன் ராஜா, கதிர்வேல் செல்வமணி ஆகியோர் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் முருகேசனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நகராட்சி மேல்நிலை வகுப்புகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கலைப்பிரிவு தொடங்க வேண்டும். ஆசிரியர்களின் வருமான வரி பிடித்தத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். 10 ஆண்டு பணி நிறைவு பெற்ற பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஆணைகள் விரைந்து வழங்க வேண்டும். ஆசிரியர்களின் பணி அமைப்பு அடிப்படையில் தேர்வு பணிகளை வழங்குதல் மற்றும் அவர்களின் முகவரியை கணக்கில் கொண்டு தேர்வு பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல் முறைகளின் படி பணி பதிவேட்டில் பணிவரன் முறையை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story