பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனந்த தாண்டவம்

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு நன்னாளில், மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெரு மான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவையை அடுத்த பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை 3 மணிக்கு பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது.

திரவியங்களால் அபிஷேகம்

இதைத்தொடர்ந்து, காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்தி களுக்கு சிறப்பு திருமஞ்சனம், 4 மணிக்கு மேல் பால், பன்னீர், சந்தனம், திருமஞ்சனப்பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடந்தது.

அதன் பிறகு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு புது அங்கவஸ் திரம் சாத்துபடி செய்யப்பட்டு, கோபூஜை முடிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

அப்போது, வேத மந்திரம், திருெவம்பா வை முதலான உபசாரங்களும் நடந்தது. சாமி உள்வீதி பிரகாரத் தில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக, வெளிவந்து, அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

திருவீதி உலா

இதையடுத்து, கோவிலின் முக்கிய ரத வீதிகளின் வழியே, மேள தாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரோட்டின் இருபுறமும் நின்ற ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.

கோவிலின் மேற்கு ரத வீதியின் வழியே வரும்போது, மேற்கு கோபுர வாசல் முன்பாக மாணிக்க வாசகருக்கு நடராஜ பெருமான் அருள் காட்சி கொடுக்கும் பொருட்டு, மாலை எடுத்து சாத்தப்பட்டது.

உடனே சிவகாமி அம்பாள், நடராஜரை வலம் வந்து, மேற்கு கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் எழுந்தருளினர். அப்போது ராஜகோபுர வாசலின் உள்புறம் நடை சாத்தப்பட்டது. இதைய டுத்து, நடராஜர் வெளிவீதி வழியே வலம் வந்து ராஜகோபுர முன் வாசலில் எழுந்தருளினார்.

திருஊடல் செய்யும் நிகழ்ச்சி

அப்போது சுந்தரசாமி, பல்லக்கில் எழுந்தருள செய்து, ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜப் பெருமானுக்கும், 3 முறை திருஊடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, கோவில் ஓதுவா மூர்த்தி ஊடல் பாடல்க ளை பாடினார். நடராஜப் பெருமானிடம் இருந்து, ஒதுவா மூர்த்தியிடம் மாலை கொடுக்கப்பட்டு, சிவகாமி அம்பாளுக்கு சாத்துபடி செய்யப்பட் டது.

உடனே சிவகாமி அம்பாள் ராஜகோபுரம் வழியே வந்து, நடராஜ பெருமானை வலம் வந்து, இருவரும் சமேதரராக கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி ஆருத்ரா தரிசன காட்சி அளித்தனர்.

இதை அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.


Next Story