அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்பு


அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்பு
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்றார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக பணியாற்றி வந்த குமரேசன் நாகை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக கடலூர் மண்டலத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த சி.ஜோதி என்பவர் பதவி உயர்வு பெற்று இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

அவரை கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.


Next Story