ஆருத்ரா மோசடி: ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை ; வாக்குமூலம் அளித்த முக்கிய புள்ளி ;சிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்


ஆருத்ரா மோசடி: ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை ; வாக்குமூலம் அளித்த முக்கிய புள்ளி ;சிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்
x
தினத்தந்தி 13 April 2023 11:30 AM GMT (Updated: 13 April 2023 12:09 PM GMT)

தை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த வழக்கில் 6 கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்ட்டுகள் என மொத்தம்16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆருத்ரா நிதி நிறுவனம்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த வழக்கில் 6 கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்ட்டுகள் என மொத்தம்16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஆருத்ரா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான ரூசோ என்பவரும் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது தான், இந்த மோசடியின் பின்னணியில் வில்லன் நடிகரான ஆர்.கே.சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இந்த் நிறுவனத்தின் கஅக்குகள் அனைத்தையும் மைக்கேல் ராஜ் தான் கையாண்டு வந்தார்.சுமார் ரூ. 1,749 கோடி பணப்பரிவர்த்தனை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.பரிவர்த்தனைச் செய்யப்பட்ட வங்கு கணக்குகளின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் ஆருத்ரா பண மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


Next Story