12-ந் தேதி பள்ளிகள் திறப்பதால் அதிகாரிகள் ஆய்வு
பெரணமல்லூர் ஒன்றியத்தில் 12-ந் தேதி பள்ளிகள் திறப்பதால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 73 தொடக்கப்பள்ளிகள், 18 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவின் பேரில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செண்பகவல்லி, சரவணராஜ், இசையருவி, மொளுகு, சுகந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்
அப்போது வகுப்பறை சுத்தம், குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகள் குறித்தும், காலை உணவு தயாரிக்கும் இடம் ஆகியவற்றையும் பள்ளி வளாகத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story