ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பூக்களின் விலை உயர்வு
ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்
ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு
திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதால் ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ வரத்து அதிகரிக்க ெதாடங்கியுள்ளது. இதில் செவ்வந்தி நாட்டு ரகம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு ரகம் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பிற பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை மும்முரம்
ஜாதிமல்லி ரூ.320, சம்பங்கி ரூ.120, பட்டுப்பூ ரூ.80, அரளி ரூ.220 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ள போதிலும் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை பெரிய அளவில் உயரவில்லை.