நெடுங்குணம் கிராமத்தில் அஷ்டபுஜ காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா
நெடுங்குணம் கிராமத்தில் அஷ்டபுஜ காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது.
சேத்துப்பட்டு
நெடுங்குணம் கிராமத்தில் அஷ்டபுஜ காளியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது.
சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் அஷ்டபுஜ காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு கோவிலில் அஷ்டபுஜ காளியம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர், குங்குமம், திருநீர் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. மூலவருக்கு விரதம் இருந்த பெண்கள் கோவில் முன்பு ஊரணி பொங்கல் வைத்து படையலியிட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அஷ்டபுஜ காளியம்மன் மகிடாசுர மர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பம்பை உடுக்கை சலங்கை மற்றும் நாதஸ்வரம் இசையுடன் திருவீதி உலா வந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெடுங்குணம் கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.