இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை


இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
x

கே.வி.குப்பம் அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த ராணுவவீரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர்

குடியாத்தம்

கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் வைஷ்ணவி (வயது 20). இவருக்கும் கே.வி.குப்பம் அருகே துரைமூலையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேகர் என்பவருடைய மகன் சூர்யவிஜய் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது

சூரியவிஜய் பெங்களூருவில் உள்ள ராணுவ போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போது 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் 50 பவுன் நகையும், காரும் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் வைஷ்ணவி பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து வரதட்சணை கேட்டதால் வைஷ்ணவி குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் ரமாபாய் ஆகியோர் வைஷ்ணவியின் கணவர் ராணுவவீரர் சூரியவிஜய், மாமியார் வசந்தா, மாமனார் சேகர் மற்றும் கணவரின் அக்காள், அவரது கணவர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story