புது செல்போன் கேட்டும்மனைவி வாங்கி கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


புது செல்போன் கேட்டும்மனைவி வாங்கி கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

புது செல்போன் வாங்கி தர கேட்டும் மனைவி வாங்கி கொடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

புது செல்போன் வாங்கி தர கேட்டும் மனைவி வாங்கி கொடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பட்டதாரி

சத்தியமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). பி.காம். பட்டதாரி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (32). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இவர்களுடைய மகன் வைஷ்ணவன் (9).

முருகேசனுக்கு நிரந்தர வேலை இல்லாததால் அவா் கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பொருட்களை விற்று மது குடித்து வந்து உள்ளார்.

தகராறு

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முருகேசன் தனக்கு புதிதாக செல்போன் வாங்கி தரவேண்டும் என மனைவி பிரிதர்ஷினியிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் வாங்கி தர முடியாது என்று கூறிவிட்டார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் முருகேசன் மனவேதனை அடைந்து மனைவி, மகனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை உள்புறமாக தாழிட்டுக்கொண்டார். இதையடுத்து பிரியதர்ஷினி தனது மகனுடன் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து முருகேசன், தன்னுடைய மனைவியை செல்போனில் வீட்டுக்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் என்னுடைய அப்பா வீட்டுக்கு வந்து நீங்களே என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. எனினும் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி வரை பிரியதர்ஷினியிடம் முருகேசன் செல்போனில் பேசி உள்ளார். எனினும் அவா் முருகேசனின் வீட்டுக்கு செல்லவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முருகேசனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பிரியதர்ஷினி தன்னுடைய பெற்றோருடன் வீட்டுக்கு வந்து கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பிரியதர்ஷினி கதறி அழுதார். மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி புதிதாக செல்போன் வாங்கி தராததால் தூக்குப்போட்டு கணவர் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story