பச்சை தேயிலை கிலோ ரூ.50 விலை நிர்ணயிக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்;விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பச்சை தேயிலை கிலோ ரூ.50 விலை நிர்ணயிக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்;விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோ ரூ.50 விலை நிர்ணயிக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அக்டோபர் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி: பச்சை தேயிலை கிலோ ரூ.50 விலை நிர்ணயிக்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அக்டோபர் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தும்பூர் ஐ.போஜன் தலைமை தாங்கினார். மேற்கு நாடு சீமை அமைப்பாளர் அர்ஜூனன், தொதநாடு சீமை அமைப்பாளர் நஞ்ஜா கவுடர், ஆலோசனைக் குழு நிர்வாகிகள் பெள்ளி கவுடர், தேவராஜ், சண்முகம், சதீஷ் பெள்ளன், காரி, பனஹட்டி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேயிலை வாரிய அதிகாரிகள், மத்திய மந்திரிகள், தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேயிலை கொள்முதல் விலை மாதந்தோறும் படிப்படியாக குறைந்து வருவதால், சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

எனவே, பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற அக்டோபர் மாதம் 23-ந் தேதி 10 ஆயிரம் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தாசில்தார் அலுவலகங்களில் விவசாயிகளுக்கு வங்கி கடன் பெறுவதற்கு அனுபோக சான்று வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் விவசாயிகளுக்கு அனுபோக சான்று வழங்க நடவடிக்கை எடுக்கா விட்டால் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் சங்க கொள்கை பரப்பு செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.


Next Story