சொத்தை ஜப்தி செய்ய சென்ற துணை தாசில்தார், வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல்


சொத்தை ஜப்தி செய்ய சென்ற துணை தாசில்தார், வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல்
x

சொத்தை ஜப்தி செய்ய சென்ற துணை தாசில்தார், வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 2 பேர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் அடமானக்கடன் வாங்கினர். ஆனால் பணத்தை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை. இதனால் அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு வங்கி நிர்வாகம் மனு கொடுத்தது. மனுவை விசாரித்த கலெக்டர், கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்க சட்டப்படி, அடமான சொத்துகளை ஜப்தி செய்து வங்கி வசம் ஒப்படைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், நேற்று திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி அதிகாரிகள் காஜாமலை லூர்த்துசாமி காலனியில் உள்ள அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, அந்த இடத்தின் உரிமையாளர்கள் 25-க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவழைத்து மண்டல துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story