தாய்-மகன் மீது தாக்குதல்


தாய்-மகன் மீது தாக்குதல்
x

தாய்-மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது

திருநெல்வேலி

நெல்லை தாலுகா தெற்கு ஆரைகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் தாசன் மனைவி பாக்கியலட்சுமி (வயது 55). இவருடைய மகன் கபர்சிங். பாக்கியலட்சுமி தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவருக்கு விற்பனை செய்தார்.

அந்த இடத்தில் வரதராஜன் கட்டிடம் கட்ட முயன்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (34) என்பவர் இது எனக்கு சொந்தமான இடம், இதில் நீங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். இதனை அறிந்த பாக்கியலட்சுமி, கபர்சிங் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாலசுப்பிரமணியன் ஆத்திரம் அடைந்து பாக்கியலட்சுமி, கபர்சிங் ஆகியோரை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story