ஊராட்சிமன்ற பெண் துணை தலைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது


ஊராட்சிமன்ற பெண் துணை தலைவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே ஊராட்சிமன்ற பெண் துணை தலைவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

ஊராட்சி துணை தலைவர்

தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி செந்தமிழ் செல்வி(வயது 40). கூத்தக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன்(43) என்பவரின் நிலத்தின் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது. இதன் முன் விரோதத்தால் வெள்ளையன் குடும்பத்தினர் அவ்வப்போது செந்தமிழ்செல்வியை திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த செந்தமிழ்செல்வியை வெள்ளையன், அவரது சகோதரர்கள் பழனி, மாது, நாகராஜ்(50) மற்றும் உறவினர்கள் பெரியசாமி மகன் கட்டிமுத்து, ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செந்தமிழ் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story