வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்


வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:37 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் தனியார் ஐ.டி.ஐ.யின் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்

தனியார் ஐ.டி.ஐ.

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் தனியார் தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ.) உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இங்குள்ள வகுப்பறையில் எலக்ட்ரிக்கல் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு திண்டிவனம் சீனிவாசன் தெருவை சேர்ந்த ஆசிரியர் கார்த்திகேயன்(வயது 40) பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் திடீரென வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மணிகண்டன்(18), பாலமுருகன்(18) ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

2 வாலிபர்கள் கைது

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(22) வெற்றிச்செல்வன்(23) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆகாஷ், வெற்றிச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தின் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story