வாலிபர் மீது தாக்குதல்


வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த மணி மகன் தங்க முருகன் (வயது 30). இவரது அண்ணன் முருகன். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன், தங்க முருகனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன் அவரது கழுத்தை பிளேடால் கீறி உள்ளார். இதுகுறித்து தங்க முருகன் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story