விற்பனை செய்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராதவர் மீது தாக்குதல்


விற்பனை செய்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராதவர் மீது தாக்குதல்
x

கே.புதுப்பட்டியில் விற்பனை செய்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராதவர் மீது தாக்குதல் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பெரியசாமி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரும்படி சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது சிவக்குமார் இதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெரியசாமி, சிவக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story