வாலிபரை தாக்கி மிரட்டல்; 3 பேர் கைது
வள்ளியூரில் வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் நம்பியான்விளையை சேர்ந்தவர் சந்துரு (வயது 20). இவர் கோதைச்சேரி ஊரைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவரது மனைவியின் வளைகாப்புக்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக சந்தோஷ், பணகுடியைச் சேர்ந்த ராஜதுரை (24), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19) மற்றும் 4 பேர் நம்பியான்விளை, பத்திரகாளியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சந்துருவை அவதூறாக பேசியும், கம்பாலும் தாக்கினர். அப்போது அதனை தடுக்க வந்த சந்துருவின் நண்பரான நவீனையும் கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தோஷ், ராஜதுரை, விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story