வளர்ச்சி திட்ட பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Sep 2023 7:15 PM GMT (Updated: 8 Sep 2023 7:16 PM GMT)

வளர்ச்சி திட்ட பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருேக புத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி கலெக்டர் ரஞ்சித் குமார் நேரில் பார்வையிட்டார். அப்போது அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஒன்றிய மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story