அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.18¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 973 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 79-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 259-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 86 ஆயிரத்து 913-க்கு ஏலம் போனது. 2 ஆயிரத்து 604 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.17.23-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.53-க்கும் என மொத்தம் ரூ.32 ஆயிரத்து 260-க்கு விற்பனை ஆனது.

கொப்பரை தேங்காய் 36 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 29-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 539-க்கும் என மொத்தம் ரூ.92 ஆயிரத்து 827-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி, கோவை, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்களை வாங்கி சென்றனர்.


Related Tags :
Next Story