அந்தியூர் சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் சந்தையில்  கொங்கு காளை மாடு  ஜோடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனை
x

அந்தியூர் சந்தையில் கொங்கு காளைமாடு ேஜாடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் சந்தையில் கொங்கு காளைமாடு ேஜாடி ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது.

மாட்டுச்சந்தை

அந்தியூரில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. மேட்டூர், எடப்பாடி, கொங்கணாபுரம், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, பர்கூர் மலைப்பகுதியில் இருந்தும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை ஏலம் போனது. காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் ்வரையும் ஏலம் போனது.

கன்று குட்டி

சிந்து பசுமாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் ஏலம் போனது.

பர்கூர் காளைமாடு ஜோடி ரூ..40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பசுமாடு ஒன்று ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையும் ஏலம் போனது. கன்று குட்டி ஒன்று ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்றது.

ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதி வியாபாரிகள் மாடுகளையும், கன்று குட்டிகளையும் வாங்கிச்சென்றார்கள்.


Next Story