ஈரோடு சத்திரோட்டில்10 நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்;நடவடிக்கை எடுக்கப்படுமா?


ஈரோடு சத்திரோட்டில்10 நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்;நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

ஈரோடு சத்திரோட்டில் 10 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு

ஈரோடு சத்திரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சுவஸ்திக் கார்னர் பகுதியில் சிக்னலுக்கு அருகில் சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான சுவஸ்திக் கார்னரில் கடந்த 10 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சிக்னலுக்காக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்போது பொதுமக்கள் சாலையோரமாக நடந்து செல்ல வேண்டும். அப்போது தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றனர்.


Related Tags :
Next Story