சின்ன ஓவுலாபுரத்தில் சமுதாயக்கூடத்தை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


சின்ன ஓவுலாபுரத்தில்  சமுதாயக்கூடத்தை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
x

சின்ன ஓவுலாபுரத்தில் சமுதாயக்கூடத்தை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது

தேனி

சின்னமனூர் ஊராட்சி சின்ன ஓவுலாபுரம் ஊராட்சியில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், புதிய சமுதாயக்கூடம், பண்ணை குட்டைகள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்ததில் முறைகேடுகள் நடந்ததாக தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பொதுமக்கள் சார்பில் சமுதாயக் கூடம், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், பண்ணை குட்டைகளை காணவில்லை என்று கிராமம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story