கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் அபேஸ் போலீசார் விசாரணை


கடலூர் பஸ் நிலையத்தில்  பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் அபேஸ்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் அபேஸ் செய்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி உமா (வயது 55). சம்பவத்தன்று இவர் கடலூர் வந்து நகை வாங்கி விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையம் சென்றார். அங்கு அவர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலூர் செல்லும் பஸ்சில் உமா ஏறினார். பின்னர் தான் கையில் வைத்திருந்த பையை பார்த்த போது, அதில் இருந்த ரூ.41 ஆயிரத்தை காணவில்லை. பஸ் நிலையத்தில் நின்ற போது யாரோ மர்மநபர், பிளேடால் பையை கிழித்து, அதில் இருந்த பணத்தை அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story