கூடலூரில், நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி போராட்டம்


கூடலூரில், நிலுவை சம்பளத்தை வழங்க கோரி  தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

கூடலூரில், நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில், நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சி தொட்டி போராட்டம்

கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் நிலுவை சம்பளத்தை வழங்க கோரி பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகாரிகளும் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நிலுவை சம்பளத்தை வழங்க கோரி தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தோட்ட அலுவலகம் பகுதியில் கஞ்சி தொட்டி திறந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

சம்பளம் கிடைக்காமல் சிரமம்

போராட்டத்துக்கு ஏஐடியுசி செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ. எம். குணசேகரன், பொருளாளர் ராஜு மற்றும் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இது குறித்து தொழிற்சங்கத்தினர் கூறும் போது:- பல கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்ட சூழ்நிலையில் அதிகாரிகள் உறுதி அளிக்கின்றனர். ஆனால் சம்பளம் கிடைக்காமல் தொழிலாளர் குடும்பங்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறது. இதனால் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பளம் கிடைத்தால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story