ஈரோட்டில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில்  ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு கிளை தலைவர் தர்மன் தலைமை தாங்கினார்.

பல ஆண்டுகளாக சரக்கு ரெயில் பெட்டிகள் ஜோலார்பேட்டை கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கப்படும். ஆனால், தற்போது ஈரோட்டிலேயே பழுது நீக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள், உரிய உள் கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. இந்த பணிக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தேவை. ஆனால் குறைவான பணியாளர்களே உள்ளனர். குறைந்த தொழிலாளர்களை கொண்டு அனைத்து பணிகளையும் முடிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தவிர்க்க கோரியும், ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், விக்னேஷ், பிரகாஷ் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story