ஈரோட்டில்அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்


ஈரோட்டில்அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
x

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.

ஈரோடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு காளைமாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பண பலன்களை மீண்டும் வழங்க வேண்டும். இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். காலி பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் சமையலர் உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு திருப்பூர், கரூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story