ஈரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாசம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக பொறுப்பாளர் சண்முகம், திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் ரத்தினசாமி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், மக்கள் உரிமைக்கழக ஒருங்கிணைப்பாளர் கணகுறிஞ்சி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும், இஸ்ரேல் அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கக்கூடாது, இஸ்ரேல் அரசுடனான பொருளாதார ஒப்பந்தத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story