எட்டயபுரம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம், கோவில்பட்டி தாலுகா அலுவலகங்கள் முன்பு இலவச வீ்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்
ஏழை, எளியவர்களுக்கு இலவச நிலப்பட்டா, வீடு வழங்க வேண்டும், முதியோருக்கு ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் ஜீவராஜ், விவசாய சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி மாரிமுத்து நடராஜன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம்கொடுத்தனர். இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கோவில்பட்டி
இதேபோன்று கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் பி. ஜோதி பாசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏழை, எளியவர்களுக்கு இலவச வீடு, வீ்ட்டுமனை பட்டா வழங்க வேண்டும், முதியோர், விதவைகளுக்கான உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எம். தெய்வேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை தாசில்தார் சுசிலாவை சந்தித்து கொடுத்துவிட்டு அனைவரும் கலந்து சென்றனர்.