கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில்ஓணம் பண்டிகை கெண்டாட்டம்
கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் ஓணம் பண்டிகை கெண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை பள்ளியில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் திருமால், வாமன அவதாரம், மச்ச அவதாரம், கிருஷ்ணர், மகாபலி, சக்ரவர்த்தி வேடமணிந்தும், மாணவிகள் ஓணம் உடை அணிந்து கோலாட்டம், மற்றும் கும்மியடித்தனர். விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பிரியா அய்யனார் தலைமை வகித்து, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உதவி தலைமை ஆசிரியர் சுஜாதா பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். ஓணம் பண்டிகை குறித்து உடற்கல்வி ஆசிரியர் ஜெயஜோதி பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர்.ஏ.அய்யனார்செய்திருந்தார்.