கோவில்பட்டி, கயத்தாறில்மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்


தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, கயத்தாறில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது வீட்டு மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, நெசவாளர்களின் கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு ஆகிய மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் கோவில்பட்டி நகர்ப்புற உப கோட்டத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு நாளை (புதன்கிழமை) கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலக வளாகத்திலும், கோவில்பட்டி கிராமப்புற உபகோட்டத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு நாளைமறுநாள் (வியாழக்கிழமை) செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) கயத்தாறில் உள்ள உதவி மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் கயத்தாறு உபகோட்டத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது, என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story