கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி;
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி இயக்குனர் சண்முகவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாவிலுள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் 224 பேர் கலந்து கொண் டார்கள்.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிகள், வாகன பராமரிப்பு, விபத்து ஏற்பட்டால் முதல் சிகிச்சை அளித்தல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியையொட்டி ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறும்படம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் நன்றி கூறினார்.