சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.840-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.840-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.32-க்கும், பட்டுப்பூ ரூ.35-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.410-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் ஏலம் போனது.


Next Story