சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்
x

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,207-க்கும், முல்லை ரூ.300-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.67-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.


Next Story