சொரிமுத்து அய்யனார் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
விக்கிரமசிங்கபுரம்:
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
சொரிமுத்து அய்யனார் கோவில்
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சபரிமலை, அச்சன்கோவில், பந்தளம், குளத்துப் புழை, ஆரியங்காவு ஆகிய இடங்களில் பல்வேறு கோலங்களில் வீற்றிருக்கும் அய்யப்பனுக்கு மூலஸ்தானமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் சென்று மாலை அணிந்து 42 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.
விரதம் தொடங்கினர்
அதன்படி சபரிமலை அய்யப்பனின் மூலஸ்தலமாக கருதும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ெநல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். முன்னதாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள்.