தாளவாடி பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து


தாளவாடி பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து
x

தாளவாடி பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு, சாம்ராஜ்நகர் செல்வதற்கு தாளவாடி பஸ்நிலையத்துக்கு வருகிறார்கள். இதனால் தாளவாடி பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட்டு விட்டு வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். மாடுகள் ரோட்டு ஓரத்தில் வளர்ந்திருக்கும் புற்களை தின்றவாறே தாளவாடி பஸ்நிலையத்துக்கு வந்துவிடுகின்றன. பஸ்கள் எழுப்பும் ஒலியால் மிரண்டு மாடுகள் அங்குமிங்கும் ஓடுகின்றன. இதனால் பயணிகளும் அச்சத்தில் ஓடுகிறார்கள். இருச்சகர வாகனங்களில் பஸ்நிலையத்துக்குள் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.

எனவே தாளவாடி ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story