51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சத்துணவு பெண் ஊழியர்


51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சத்துணவு பெண் ஊழியர்
x

51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சத்துணவு பெண் ஊழியர் அசத்தி உள்ளார்.

கரூர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஹீலா பானு (வயது 51). இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு 9-ம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால், 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனிதேர்வராக தேர்வு எழுத விண்ணப்பித்து, தேர்வு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் துணைத்தேர்வில் தோல்வி அடைந்த 3 பாடங்களுக்கு விண்ணப்பித்தார். பின்னர் அதில் தமிழ், கணிதம் ஆகிய தேர்வு எழுதினார். நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் பாடத்தேர்வையும் எழுதி உள்ளார்.

இதுகுறித்து ராஹீலா பானு கூறும்போது, நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுத எனது மகன் சாகுல் அமீது, பல்வேறு முயற்சிகளை எடுத்து எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து, தேர்விற்கு விண்ணப்பித்து கொடுத்தார் என்றார்.


Next Story