அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு
x

நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

நெல்லை ரெட்டியார்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் மகப்பேறு வசதி, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அரங்கு, உள்நோயாளிகள் பிரிவு, பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஆய்வுக்கூடம், ஸ்கேன் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த சுகாதார நிலையத்துக்கு என்.கியூ.ஏ.எஸ். எனப்படும் தேசிய தர சான்று வழங்குவதற்கான மத்திய சுகாதார குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தேசிய சுகாதார குழு

இந்த குழுவில் கேரள மாநில சுகாதாரத்துறை உதவி இயக்குனர் மினிமோல், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட ஆஸ்பத்திரி தலைமை செவிலியர் வஜ்ராபூ இந்திரா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தங்களது ஆய்வு பணியை தொடங்கினர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து மருத்துவ பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டனர். அங்குள்ள ஆய்வக வசதி உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். மேலும் சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டனர். தொடர்ந்து டாக்டர்கள், களப்பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட தர மருத்துவ அலுவலர் பிரவீன் குமார், ரெட்டியார்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஜஸ்டின் பொன்னையா, டாக்டர் நம்பி நாச்சியார், சுகாதார ஆய்வாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story