திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்


திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாமக்கல், சேலம், கோவை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் குறிப்பாக வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் வேதாரண்யத்தில் இருந்து உப்பு, பூ வகைகள், காய்கறி, கீரை வகைகள் அனைத்தும் இந்த வழியாகத்தான் மன்னார்குடி தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ரெயில்கள்

மேலும் திருவாரூர் பகுதி முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மன்னார்குடி சாலையில் செல்ல ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல வேண்டுமானால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டும். ஆனால் திருத்துறைப்பூண்டி ெரயில்வே ஜங்ஷனை கடந்து பல ரெயில்கள் சென்று வருகின்றன.

சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக செங்கோட்டைக்கு விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து செகந்திராபாத் பகுதிக்கும் ெரயில் இயக்கப்படுகிறது.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

மேலும் இந்த பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் ரெயில்களும் திருத்துறைப்பூண்டி ெரயில்வே பாதையை கடந்து செல்வதால் ஒரு நாளில் 5-ல் இருந்து 10 முறை ெரயில்வே கேட்டை மூட வேண்டிய சூழல் உள்ளது.

எனவே திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே கேட்டை மூடினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ரெயில்வே மேம்பாலம்

இதனால் வெளியூருக்கு செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் முதியவர்கள் அன்றாடம் பணிக்கு செல்லும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

எனவே உடனடியாக திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story